கோக்கு மாக்கு

போலி டாக்டர் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது.இதையொட்டி எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன் மொழி மற்றும் சுகாதார அலுவலர்கள் நேற்று மதியம் சோதனை மேற்கொண்டனர். அதில், எறையூரை சேர்ந்த ஜாபஸ்ராய், (45); என்பவர் உரிய மருத்துவ தகுதியின்றி, கல்கத்தா என்ற பெயரில் கிளினிக் வைத்து நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரிந்தது.சம்பவ இடத்தில் ஜாபஸ்ராய் இல்லை. இதையடுத்து, கிளினிக்கில் இருந்த ஸ்டெதஸ்கோப், ஊசி மற்றும் மருந்து பொருட்கள் பறிமுதல செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், ஜாபஸ்ராய் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button