திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரு கோடி பனை விதைகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, பனைமர விதைகள் நடும் திட்டத்தின் தொடக்கமாக, மாவட்டம் முழுவதும் நேற்று (நவம்பர் 23) ஒரே நாளில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 700 பனைமர விதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஒருங்கிணைத்திருந்தார். அதற்காக, அனைத்து ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் சுமார் 2.20 லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியம், காட்டாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில், பனைமர விதைகள் நடும் பணிைய, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.