கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கோனங்குளம் பகுதியை சேர்ந்த ராம்மோகன் மகன் ராகுல். இவர் கண்ணங்குடி மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராகுல் உள்ளிட்ட 3 பேர் ராகுலை வழிமறித்தது செல்போன் மற்றும் கையில் அணிந்திருந்த வெள்ளி பிரேஸ்லெட்டை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் மகன் ராகுலை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.