
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் நேற்று (நவ., 24) இருசக்கர வாகனத்தில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த நிலையில் விபத்து குறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.