
ராஜபாண்டலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, ஒன்றிய சேர்மன் திலகவதி, ஆத்மா குழு தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பாப்பாத்தி வரவேற்றார். சங்கராபுரம் தொகுதி எம்.எல். ஏ., உதயசூரியன் நலத்திட்ட உதவி வழங்கினார்.இதில் மாவட்ட ஊராட்சி செயலாளர் இளங்கோவன், பி.டி.ஓ., க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகா, சசிகுமார், பொருளாளர் ராஜகோபால், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.