சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாமை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்து பேசுகையில் ‘விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கினால் அதிக லாபம் பெறலாம்.
கல்வராயன்மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் தொடங்கலாம். சுயதொழில் தொடங்குபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும். மேலும் மாவட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகரையில் சிப்காட் மூலம் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளது. உத்யம் பதிவு சான்றிதழ் பெறுவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசின் சலுகைகள் மற்றும் கடனுதவிகளைப் பெற முடியும்’ என்றார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், சின்னசேலம் பேரூராட்சி சேர்மன் லாவண்யா, துணைத் தலைவர் ராஜேஷ் மற்றும் வணிகர்கள் பங்கேற்றனர்.