திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலம் இணைந்து வட்டார அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 4-ம்தேதி தி. மலை மாநகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளி, வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 6-ம்தேதி கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 10-ம்தேதி தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அனக்காவூர் அடுத்த புரிசை அரசு மேல்நிலைப் பள்ளி, 11-ம்தேதி சாணானந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இதேபோல, 17-ம் தேதி செங்கம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தெள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி, 18-ம்தேதி புதுப்பாளையம் வட்டார வள மையம், பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 20-ம் தேதி கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேத்பட் அடுத்த பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி என 31-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமுக்கு, மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.