
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கடலாடி அடுத்த காஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை அருகே ஒரு பெண் நேற்று (நவ., 24) மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கடலாடி போலீசார் இறந்து கிடந்த பெண் யார்? என்று விசாரணை செய்ததில் பெரிய கிளம்பாடிய கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் என்றும் அவர் காலி மது பாட்டில்களை பொறுக்கி விற்று வருவார் என்பதும் தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்று கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.