திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் சிறப்பு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது.
ஸ்ரீமந்நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கர்ய அறக்கட்டளை ஆகியவை சார்பில் நடைபெற்ற மாநாட்டை ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் எஸ். குமார் தொடங்கி வைத்தார். வந்தவாசி ஆண்டாள் குழுவினரின் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீராமாயணத்தில் ‘சரணாகதி’ என்ற தலைப்பில் திருக்குடந்தை உ. வே. வெங்கடேஷ் சுவாமிகள் உபன்யாசம் ஆற்றினார்.
முன்னதாக, ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை தலைவர் கு. மணிவண்ணன் வரவேற்றார். முடிவில், ஸ்ரீநிவாச பெருமாள் நன்றி கூறினார்.