கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ் பாபு தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு, கோபி மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரம் அருகே உள்ள கீழக்குண்டலப்பாடி சவாலி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செல்வபாரதி என்பதும் சிதம்பரம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வ பாரதியை கைது செய்த போலசோர் அவர் திருடிய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.