கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கடலூர் திருப்பாதிரிபுலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி வளாக கலையரங்கத்தில் இளைஞர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 683 ஊராட்சிகளுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 835 தொகுப்புகளை வழங்கினார்.
உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.