கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் ஆர். எம். கதிரேசன் 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் கடந்த 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை பல்கலைக்கழக அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஐ. ஏ. எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குழுவின் கன்வீனராக சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் டி. ஆபிரஹாம் ஐ. ஏ. எஸ்., உறுப்பினரகளாக தமிழ்நாடு அரசு நிதித்துறை கூடுதல் செயலாளர் ஜி. கே. அருண் சுந்தர் தயாளன் ஐ. ஏ. எஸ். மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் அருட்செல்வி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.