பண்ருட்டி அடுத்த பக்கிரி பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் இவரது மனைவி ஜெயந்தி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிபழக்கம் கொண்ட சிலம்பரசன் கடந்த 23ஆம் தேதி இரவு குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் குடித்த நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பண்ருட்டி காவல் நிலையத்தில் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.