கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கலம்பேட்டை பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பதிவாளர் மகாலட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர் வேல்முருகன், ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன், மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் சம்சாத் பேகம் இப்ராஹிம், திமுக நகர செயலாளர் செல்வம், காங்கிரஸ் மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன், வட்டாரத் தலைவர்கள் இராவணன், சாந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.