கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • சட்டவிரோத மாடுகள் போக்குவரத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் , விலங்குகள் வதை தடுப்பு சங்கம் – 3 மாடுகள் பலி

    கடந்த 12.03.2026 அன்று காலை திண்டுக்கல் மாவட்டம் , செம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் ஊருக்கு அருகே ஆந்திராவில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 28 மாடுகளை ஏற்றிச்சென்ற கண்டைனர் வாகனம் ஒன்று சாலையை விட்டு கீழே இறங்கி சாய்ந்தது. இந்த சம்பவத்தில் மூன்று மாடுகள் இறந்ததுடன் மேலும் பல மாடுகள் காயமடைந்தன. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி பொதுமக்கள் துணையுடன் வாகனத்தில் இருந்து…


  • அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்தல் – தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள் 

     மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிழல் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  இந்த மரங்களின் நிழலில் தான் அங்கு வரும் வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளை பார்க்க வரும் நபர்களும் ஓய்வு எடுத்துவந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழமையான மற்றும் மருத்துவமனைக்கு வருவோர்க்கு நிழல் தந்து கொண்டிருந்த மரங்களை ஒரு கும்பல் வெட்ட தொடங்கியுள்ளது . இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை…


  • சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்

    நாட்டைக் காக்கும் கடற்படையில் பணியாற்றிவிட்டு நாட்டிற்குத் துரோகம் செய்த ஒரு கருப்பு ஆடு சிக்கியுள்ளது யார் இந்த துரோகி என்றால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார் என்ற லக்கி(24) இவன் கேரளாவின் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை கட்டளையகத்தில் லான்ஸ் நாயக் ஆகப் பணியாற்றி வந்தான். கடற்படைத் தளங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நாட்டின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜென்ட்டுகளுக்கு அனுப்பியுள்ளான். உளவு பார்த்ததற்காகப் பாகிஸ்தான் ஏஜென்ட்டுகளிடம் இருந்து…


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button