நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது
திண்டுக்கல் மாவட்ட SP ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது திருச்சி ரோடு கல்லறை மேடு அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய திண்டுக்கல் தண்டல்காரன் பட்டியை சேர்ந்த பாலாஜி,சுந்தர், மருதராஜ் திண்டுக்கல் YMR-பட்டியை சேர்ந்த கௌதம், சக்திவேல்(எ) முட்டக்கண் சக்திவேல், விக்னேஸ்வரன்(எ)விஷ்வா ஆகிய 6…
-
100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக CBCID போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் அழைத்துச் சென்றனர் . மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
திண்டுக்கல் செய்தி 29.07.2026 பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் இரண்டு கோடிக்கு மோசடி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ் வழக்கு தொடர்பாக பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரியின் பேரில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்…
-
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியனின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கரூர் கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு…