நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில் இருந்து மழை நீர் கசிவு ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. கோயிலின் சுற்றுப்புற சுவர்களில் விரிசல் காணப்படுவதால் தண்ணீர் உள்ளே விழுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பல ஆண்டுகளாக கோவில் சுற்றுப்புறங்களில் எந்த ஒரு திருப்பனியையும் கோவில் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என்றும், இரண்டு கல் மண்டபங்கள் சிதலமடைந்து கவலைக்கிடமாக காணப்பட்டு…

