கோக்கு மாக்கு
Trending

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்

பண்ருட்டி எம்எல்ஏ மோகன் வருகையால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் அரசை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்பட 22 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பு சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இருதரப்பினரும் சபாநாயகரை நேரில் சந்தித்து பேசினர் இதையடுத்து, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார்.

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் மதுராந்தகம் மரகதம் குமாரவேல், மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா
ஆகிய நான்கு பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைத்துக் கொண்ட நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு நான்கு பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்

இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் மதுராந்தகம் மரகதம் குமாரவேல் ஆகிய மூவரும் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தனர் எதன் காரணத்திற்காக தாங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்தோம். அதிமுகவில் கொறடா நியமிக்கப்படாத சூழலில் தான் நாங்கள் ராஜினாமா செய்தோம் அதனால் எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என்பது உள்ளிட்ட விளக்கத்தை சபாநாயகர்களிடம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன் தலைமைச் செயலகம் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ஏற்கனவே ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில் மேலும் ஒருவர் ராஜினாமா செய்ய உள்ளார் என்ற தகவல் பரவியது இதையடுத்து சில நிமிடங்களில் தலைமைச் செயலகத்தில் இருந்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் புறப்பட்டார் அவரிடம் சபாநாயகரை சந்திக்க உள்ளீர்களா என்று கேட்டதற்கு இல்லை என கூறி புறப்பட்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button