
மனமகிழ் மன்றம் (FL2) என்ற பெயரில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை என குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டத்தில் FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன
இவை அனைத்துமே நகரின் முக்கிய பகுதிகளிலும் தேசிய மாநில நெடுஞ்சாலையின் அருகிலும் அமைந்துள்ளன
FL2 பார் விதிகளின் படி டாஸ்மாக்- ல் விற்கப்படும் விலை குறைந்த மற்றும் குறிப்பிட்ட சில மது வகைகள் விற்பனை செய்ய அனுமதி இல்லை
அதேபோல முக்கிய நெடுஞ்சாலைகளின் அருகில் மதுபான விற்பனை மற்றும் மது அருந்தும் மதுபான கூடங்கள் செயல்படவும் தடை உள்ளது
குறிப்பாக இந்த மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த FL2 மது விற்பனை கடைகளில் உள்ள பார்களில் அந்தந்த மனமகிழ் மன்றத்தின் சந்தாதாரர்கள் மட்டுமே மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் இயங்கிவரும் மனமகிழ் மன்றங்களில் ( FL2 மதுவிற்பனை நிலையங்களுடன்) கூடிய போலியான சந்தாதாரர்களை கணக்கில் காட்டியும் சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள வசதிகள் செய்யாமலும் இயங்கி வருவது கூடுதல் தகவல்
இவ்வளவு விதிகள் உள்ளபோதும் திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் FL2 பார்களில் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் , நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் நடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் பார் நடத்தலாம் என்று தனி விதி வகுக்கப்பட்டுள்ளது போல சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் , தாடிக்கொம்பு ரோடு அஞ்சலி ரவுண்டானா , மாவட்ட விளையாட்டு மைதானம் , காட்டாஸ்பத்திரி என அனைத்து பகுதிகளிலும் FL2 பார் அமைத்து விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது
சமீபத்திய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வழிபாட்டு தளங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் அப்புறப்படுத்த தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு உத்தரவிட்டுள்ளது
இதற்கிடையே அஞ்சலி ரவுண்டானா பகுதியில் புதிதாக உதயமாகியுள்ள சன்லைட் மனமகிழ் மன்றத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற ஒட்டப்பட்டு விற்பனைக்கு வரும் ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது
இதுகுறித்து விசாரித்ததில் FL2 மதுபான கடைகளுக்கு வரவேண்டிய சரக்குகள் மாவட்ட மதுபான கிடங்கில் போதிய இருப்பு இல்லை என்றும் அதனால் மதுபிரியர்கள் அரசு மதுபான கடைகளுக்கு சென்றுவிடுவார்கள் என்பதால் அரசு மதுபான விற்பனை நிலையங்களில் இருந்து சட்டவிரோதமாக மொத்தமாக கொள்முதல் செய்து FL2 கடையில் வைத்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது ( மாவட்டத்தில் தற்போது இயங்கிவரும் பெரும்பாலான FL2 கடைகளில் இதே நிலை தான் உள்ளது என்பது கூடுதல் தகவல் ).
மாவட்டத்தில் இயங்கிவரும் இதுபோன்ற FL2 மதுக்கூடங்களில் பெரும்பாலானவை மத்திய அரசின் துறைகளின் அனுமதி மட்டும் பெற்றுக்கொண்டு தமிழக அரசின் அனுமதி பெறாமலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது
மேலும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இயங்கிவரும் FL2 கடைகளில் குடிப்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வரும் குடிமகன்கள் நெடுஞ்சாலைகளில் எதிர்திசையில் செல்வதாலும் குடிபோதையில் நெடுஞ்சாலைகளில் கவனக்குறைவாக செல்வதாலும் தினந்தோறும் விபத்துகள் நடந்துவருகின்றன
இவை அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய மாவட்ட காலால் அதிகாரி , காவல்துறையினர் , வருவாய் துறையினர் , மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் என யாருமே கண்டுகொள்ளாததால் நாளுக்கு நாள் பில்ட௨ பற்களின் எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
