
உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில், பிப்பல்கோட்டி என்ற இடத்தில், தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம் சார்பில், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீரின் வேகம் காரணமாக தொழிலாளர்கள் அனைவரையும் சுரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு அடித்துச் செல்லப்பட்டத்தில் 22 பேர் சிக்கிக் கொண்டனர். இந்த தகவலறிந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் 20பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 7 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 13 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


