செய்திகள்

பேருந்து நடத்துனரை தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்

சென்னை ஐயப்பந்தாங்கலிலிருந்து, வடபழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை, நடத்துநர் பேருந்துக்குள் வந்து பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள், ஓடும் பேருந்திலேயே நடத்துநருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் மாணவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button