
மதுரையில்(28.09.2026) அன்று நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சூடும் போட்டியில் U14- பிரிவில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த உஷா மணிகண்டன் தம்பதியினரின் மகள் ஹாரிஷா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி மாதம்(18.01.2027) மத்திய பிரதேசத்தில் உள்ள இண்டூரில் 18.23. இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய
போட்டிகளில் பங்கேற்க கூடிய தகுதியை பெற்றுள்ளார்.

இவருக்கு சின்னாளபட்டி பகுதியில் உள்ள சேரன் வித்யாலயா ஆசிரியர்கள் உடன் பயிலும் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுகளையும் தெரிவித்து
மத்திய பிரதேசத்தில் நடக்கக்கூடிய போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினார்
இப் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களை வினோதினி ஆய்வாளர் உடற்கல்வி மதுரை வழங்கினார்.
இவர் சென்ற வருடம் ஜனவரி மாதம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது


