
தஞ்சாவூர் மாவட்டம் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள பை ஸ்டார் லாட்ஜில் விபச்சாரம் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 20-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது வடமாநில பெண்கள் உட்பட ஆறு பெண்கள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், லாட்ஜை நடத்தி வந்ததாகக் கூறப்படும் தி.மு.க., நிர்வாகி ராஜா ரகுபதி மீது விபச்சாரம் தொடர்பான ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ராஜா ரகுபதியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.



