
திண்டுக்கல் மண்டல வனப்பாதுகாவலர் முகமது சபாப் IFS அவரின் உத்தரவின் படியும் மாவட்ட வன அலுவலர் நாகா சதீஸ் கிடிஜாலா IFS அவரின் அறிவுறுத்தலின் படியும் சிறுமலை வனச்சரகர் சுரேஷ் தலைமையில் சிறுமலை வானவர் சங்கர் , வன காவலர்கள் பார்த்திபன் , திலகர் உட்பட வனத்துறையினர் சிறுமலை மலை பகுதி முழுவதும் கண்காணிப்பு , ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது வனச்சரக அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து PTP எஸ்டேட் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர் சோதனையின்போது காட்டுமாடு , காட்டுபன்றி ஆகியவற்றின் தலைகள் மற்றும் எலும்புகள் மற்றும் கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டை , கத்திகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து அங்கு பணியில் இருந்த கேரளா மாநிலம் கம்பமேட்டு பகுதியை பூர்வீகமாக கொண்ட தற்போது சிறுமலை தென்மலை வசித்துவரும் தாமஸ் மகன் பிஜுதாமஸ் ( வயது – 38 ) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் எஸ்டேட் பகுதி கல்கோட்டையில் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்ட விபரத்தை கண்டறிந்து கல்கோட்டையின் ஒருபகுதியை பிரித்து பார்த்ததில் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குழாய் மற்றும் ஒரு காலி தோட்டா கைப்பற்றப்பட்டது .
அருகில் இருந்த மற்றுமொரு கல் கோட்டையை பிரித்துப்பார்த்தி அதிலிருந்து மற்ற நாட்டு துப்பாக்கி பாகங்களும் இரண்டு காலி தோட்டங்களும் கைப்பற்றப்பட்டன.
மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளாரா என்றும் சிறுமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
