
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு கட்டண வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் வணிகமும் வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
எனவே மத்திய அரசு உடனடியாக யுபிஐ கட்டணம் வசூல் செய்வதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசின் இச்செயலை கண்டித்தும் இன்று 01.10.26 திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் வர்த்தகர் சங்கமும் திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் செயலை கண்டித்து யு பி ஐ பண பரிவர்த்தனை கட்டணத்தை திரும்ப பெறு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு எதிராக கோஷங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வணிகர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 5,000 இமெயில்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.