க்ரைம்
Trending

குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்கா உள்ளது . அதன் காம்பவுண்ட் சுவர் அருகில் மின் வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் ஒன்றும் உள்ளது . இந்த இடத்தில் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி வருவதும் அவ்வப்போது அதை எரித்துவிடுவதும் தொடர்கதையாக உள்ளது என அப்பகுதி குடியிருப்புவாசிகள் புலம்பி வருகின்றனர்  . 

    இந்நிலையில் இன்று மதியம் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது தீ பரவி டிரான்ஸ்பார்மர் வரை பரவத்தொடங்கியது . தகவல் கிடைத்து அங்கு வந்த மின்சார வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து டிரான்ஸ்பார்மர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்தனர் .

அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அதன் வெப்பத்தால் அருகில் செல்ல முடியவில்லை 

அதற்குள் தகவல் கிடைத்து அங்கு வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் மயிலராஜ்  தலைமையிலான தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர் 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button