
சென்னை, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஃபைரோஸ் பாபா, திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் துறாபுதீன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சுல்தான், வடசென்னை மாவட்ட தலைவர் ஜவுருதீன், திமுக வட்டச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது, 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கு ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை மின்சார கட்டணம் வருவதாக இந்திய லீக் கட்சியினர் குற்றம் சாட்டினர். தொடர்ந்து உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

