அரசியல்
Trending

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான பாகுபாட்டை கண்டித்து முழக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் தமிழ்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலர் மயில்ராஜ், மதுரை கிழக்கு மாவட்டச் செயலர் அரசமுத்து பாண்டியன், பொருளாளர் நல்லசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நத்தம் அருகே கோமணாம்பட்டியில் பட்டியல் சமூக மக்கள் கோயிலுக்குச் செல்லத் தடை, பொதுப்பாதையில் செருப்பு அணியத் தடை, அங்கன்வாடியில் இரட்டைத் தட்டு முறை உள்ளிட்ட பாகுபாடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், நத்தம் மூன்றுலாந்தரில் உள்ள மார்பளவு அம்பேத்கர் சிலையை முழு உருவச் சிலையாக அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இதில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.சண்முகவேல், மாவட்ட துணைச் செயலர்கள் மயில்ராஜ், பூமுருகன், விஸ்வநாதன், ஒன்றியச் செயலர்கள் மகாராஜன், திருமாதவன் மற்றும் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button