அரசியல்

பட்டிமன்ற பேச்சாளராக ஸ்டாலின் மாறி விட்டார் – அமைச்சர் ராஜ்மோகன்

திருநெல்வேலியில் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது எதுகை, மோனையுடன் பட்டிமன்ற பேச்சாளரைப் போல் பேசுவதாக விமர்சித்தார்.

இதையடுத்து, சட்டசபை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவதாக கூறிய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதும் தற்போது முழுமையாக ஒளிபரப்பப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், சட்டசபையில் இடநெருக்கடி அதிகரித்துள்ளதால் புதிய தலைமைச் செயலகம் தேவைப்படுவதாகவும், மக்களின் நலன் சார்ந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களுடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அவர்கள் செயல்படும் இடங்களுக்கே சென்று நடத்துவது சரியான நடைமுறை என்றும், லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த முழுமையான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button