அரசியல்

ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டேன் – ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம் இனிமேல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

108 இடங்களை வென்ற தாங்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து அரசியல் திட்டங்களை மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அரசியல் அனுபவம் என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என சிலர் நினைப்பதாகவும் முதலமைச்சர் விஜய் பேசினார்.

மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொடவும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம் எனக் கூறிய அவர், சட்டப்பேரவையில் கடந்த கால ஊழல் விவகாரங்களை தொடர்ந்து பேசிவருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, 35 ஆண்டுகளாக தமிழக அரசியலை பார்த்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக கூறிய விஜய், கடந்த காலங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப் போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம் என ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் எச்சரிக்கை விடுத்த விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பும், பின்னரும் உள்ள சொத்துக் கணக்கை வெளியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் தோற்றாலும், ஜெயித்தாலும் அவர் தான் என் ஸ்வீட் அங்கிள் எனக் குறிப்பிட்ட விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என திமுகவினரே கூறத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, தாங்கள் அரசியலில் குழந்தை என்றும், தமிழக மக்களின் குழந்தையாக இருப்பதாகவும் கூறிய விஜய், திமுகவை விமர்சித்து தனது உரையை நிறைவு செய்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button