அரசியல்

வண்டலூர் பள்ளி மாணவி விவகாரம் தவெக ஆட்சியில் போலீசார் செயல்படும் லட்சணம் இதுதானா? – இபிஎஸ் கேள்வி

வண்டலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசையும் காவல்துறையையும் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய காவல்துறை, செய்திகளை வெளியிட்ட ஊடகப் பதிவுகளை நீக்குமாறு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான செய்தி வெளியான உடனேயே அதனை False News எனக் கூறுவது ஏன் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக, செய்தி வெளியாகக் கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button