
நீலகிரி மாவட்டம் கூடலூர்–மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், குட்டிகளுடன் காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தொரப்பள்ளி–தெப்பக்காடு சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.
இதையடுத்து, யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
