


திண்டுக்கல் மாவட்டம், அழகர்கோவில் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட வனவிலங்கான பெரிய இந்திய பழ வௌவால்களை (Greater Indian Fruit Bat) வேட்டையாட முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகர்கோவில் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினர் வழக்கமான நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அழகர்மலை காட்டின் வேம்பராளி பிரிவு பகுதியில் கண்ணிகளை (Snares) அமைத்து, வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் அட்டவணை II-ன் கீழ் (2022 திருத்தத்தின்படி) பாதுகாக்கப்படும் ‘பெரிய இந்திய பழ வௌவால்’ இனத்தை வேட்டையாட முயன்ற எட்டு பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் (Offenders) விவரம்:
1: ராஜேந்திரன், த/பெ. அழகன், தேத்தம்பட்டி, நத்தம்.
2: காத்தக்குட்டி, த/பெ. அழகன்பாளா, தேத்தம்பட்டி, நத்தம்.
3: சங்கர், த/பெ. ராமன், உடையாம்பட்டி, நத்தம்.
4: செல்வம், த/பெ. அழகன், தேத்தம்பட்டி, நத்தம்.
தப்பியோடிய தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
