
திண்டுக்கல் மாவட்டம்
ஐயா இந்த திமுக நிர்வாகியிடம் இருந்து எங்களது சம்பளத்தை வாங்கி குடுங்க என ஊழியர்கள் கதறல்
புகாரளித்தும் எந்த வித நடவடிக்கை இல்லாததால் ஊழியர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர்
இந்திய மக்களுக்காக மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்து வரும் ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு BPA கன்ஸ்ட்ரக்சன் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது
இந்நிலையில் இந்த BPA கன்ஸ்ட்ரக்ஷனின் உரிமையாளராக திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான திண்டுக்கல் மாநகராட்சியின் மேற்கு மண்டல தலைவர் மற்றும் 39 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் பிலால் உசேன் என்பவர் இருந்து வருகிறார்
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நான்கு மேற்பார்வையாளர் 24 பரப்புரையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது


இவர்களுக்கு மாத ஊதியம் இ எஸ் ஐ. பி எப் பிடித்தம் போக
வங்கி கணக்குகளில் மட்டுமே செலுத்த முடியும் மேலும் அதற்கான பே ஸ்லிப்பை ஏஜென்சி மூலம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்

இந்நிலையில்
அனிமேட்டர் எனும் பரப்புரையாளர்களுக்கு சுமார் 16817 ரூபாய் மாத சம்பளமாகவும் ஈஎஸ்ஐ பி எப் 2144 ரூபாய் பிடித்தம் போக ஒவ்வொரு ஊழியருக்கும் 14 ஆயிரத்து 673 ரூபாய் மாத சம்பளமாக வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்பட வேண்டும்
ஆனால் இந்த BPA கன்ஸ்ட்ரக்சன் நிறுவன தலைவரான திமுகவைச் சேர்ந்த பிலால் உசேன் என்பவர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் எழுதப்படாத பாண்டு பத்திரத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு ரூபாய் 7300 ரூபாயை ரொக்கமாக கையில் கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட ஆறு பேருக்கு புகார் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊழியர்கள் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
மேலும் இந்தப் பிரச்சனை BPA நிறுவனத்திடம் தெரிய வந்த பிறகு ஒவ்வொரு ஊழியருக்கும் 7300 க்கு பதிலாக 9 ஆயிரம் ரூபாயை ஏற்றி தருகிறோம் அனைவரும் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை என கையெழுத்திடுங்கள் என கூறியதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து BPA கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரும் திமுக நிர்வாகியும் ஆன பிலால் உசேன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது ஊதியத்தை முழுமையாக பெற்று தரும்படியும் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர் ம
தற்போதைய கிடைக்கப்பெற்ற தகவலின்படி பெரும்பலான பதிக்கபட்ட தூய்மை இந்தியா திடட பணியாளர்களை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களின் சம்பள வழங்களில் எந்தவித தவறும் நடைபெறவில்லை என்று கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இன்னும் சிலர் கடிதங்கள் தர மறுத்து விட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.
தற்போது புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பாதிக்கப்பட்ட தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கு உழைப்பிற்கான முழு ஊதியத்தையும் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது