சினிமா

இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை – யாரை சொல்கிறார் நடிகை அனுபமா

இந்திய சினிமாவின் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் கொடி, பைசன் படங்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்​டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பதிவில், “இன்​றி​லிருந்​து, எனது வாழ்க்​கை​யைத் தேர்ந்​தெடுக்​கிறேன், இனி யாருடைய அனு​ம​தி​யும் தேவையில்லை, ஒரு காலத்​தில், என்​னுடையது என்​பதை மறந்​திருந்த அந்த வாழ்க்கையை மீண்​டும் நேசிக்​கத் தொடங்குகிறேன்” என்று நடிகை அனுபமா பரமேஸ்​வரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் மீண்​டும் என்​னிடம் திரும்பி வரு​கிறேன், உங்​கள் அனைவரை​யும் நேசிக்​கிறேன், எனக்​குத் துணை​யாக நின்றதற்கும், என் மீது நம்​பிக்கை வைத்​ததற்​கும், என் வாழ்க்கையை அன்​பால் நிரப்​பியதற்​கும் நன்றி” என்றும் தெரி​வித்​துள்​ளார். இளம் நடிகர் ஒருவரை காதலித்து வந்த நடிகை அனுபமா, காதலில் பிரிவு ஏற்​பட்​டதை அடுத்து இவ்வாறு பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button