க்ரைம்
Trending

வேட்டையாட பயன்படுத்தும் நோக்கத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி பாகங்கள் பறிமுதல் – இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் திரு.நாக சதீஷ் கிடிஜாலா இ.வ.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, 03.09.2026 அன்று, திரு. ரா. சுரேஷ், வனச்சரக அலுவலர், சிறுமலை வனச்சரகம் அவர்களின் தலைமையில், சிறுமலை பிரிவு வனவர் திரு. சங்கர், தென்மலை பீட் வனக்காப்பாளர் திரு. திருநாவுக்கரசு மற்றும் தென்மலை பீட் வனக்காவலர் திரு. விக்னேஷ்வரன் ஆகியோர் அடங்கிய வனச்சரக வனப்பணியாளர் குழுவினர், சிறுமலை பிரிவு, தென்மலை பீட் எல்லைக்குட்பட்ட சிறுமலை கிராமம், பொன்னுருவி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை கிராமம், தென்மலை பொன்னுருவி பழைய வன ஆக்கிரமிப்பு பகுதியில், சிறுமலை மேற்கு வனவட்டாரம்-I, பிட்-III காப்புக்காடு பகுதி, சிறுமலை கிராம புல எண். 695-ல் வசித்து வரும் ராஜசன்னாசி மகன் முடியரசன் என்பவரது தோட்டத்திற்க்கு சென்று முடியரசுவின் மகன்களான ஜீவானந்தம், சு.வ. 24/2026 மற்றும் சந்தோஷ்குமார், சு.வ. 24/2026 ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் முதலில் நாட்டுத்துப்பாக்கி தொடர்பாக விசாரணை செய்து அவர்கள் வசித்து வரும் வீட்டின் எதிர்புறத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குழாயில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியின் இரும்பு பேரல் குழாய்கள் மூன்று, இரும்பு ட்ரிகர் ஒன்று, அருகிலுள்ள தகரக் கொட்டகையிலிருந்து சிவப்பு நிற காலித்தோட்டா ஒன்று மற்றும் நாட்டுத்துப்பாக்கியில் பொருத்தப்படும் மரக்கட்டையால் ஆன முன்பக்க கைப்பிடி ஒன்று மேலும் அவர்கள் இரவில் காவலுக்காக பயன்படுத்தி வரும் வீட்டிலிருந்த கடமான் கொம்பு ஒன்றினையும் கைப்பற்றினர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக, சிறுமலை வனச்சரகத்தில் வன உயிரின குற்ற வழக்கு எண். 07/2026, நாள் 03.09.2026 பதிவு செய்யப்பட்டது

மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதித்துறை நடுவர், JM-I அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் 15 இருப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button