க்ரைம்
Trending

கால்நடைகள் திருட்டு வழக்கில் இருவர் கைது -பணம் ரூபாய். 30,000/- பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45), த/பெ. அய்யாதுரை என்பவர். தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாடு மற்றும் ஒரு கன்று ஆகியவை 01.09.2026 இரவு திருட்டு போனதாக 02.09.2026 அன்று விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் பேரில் விளாம்பட்டி காவல் நிலையத்தில் கால்நடைகள் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த திருட்டு வழக்கில் எதிரிகளை கண்டறியும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் உட்கோட்டை காவல் பேரில் நிலக்கோட்டை துணைக்கண்காணிப்பாளர் திரு. இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையில் விளாம்பட்டி காவல்நிலைய பொறுப்பு காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (56), த/பெ. ராமு என்பவர், மேற்படி கால்நடைகளை TN-76-D-6771 என்ற TATA ACE வாகனத்தில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, 03.09.2026 காலை சுமார் 08.00 மணியளவில் ராமமூர்த்தி மற்றும் TATA ACE வாகனத்தை ஓட்டிச் சென்ற முத்துப்பாண்டி (39), த/பெ. தங்கமுத்து, கரட்டுப்பட்டி, சோழவந்தான், மதுரை மாவட்டம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், திருடப்பட்ட கால்நடைகளை திருச்சி மாவட்டம், மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கால்நடைகளை விற்பனை செய்ததன் மூலம் பெறப்பட்ட ரூ.30,000/-பணம் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரு எதிரிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல் கண்காணிப்பாளரின் அறிவுரை:

திருட்டு மற்றும் கால்நடை திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் பகுதிகளிலும், வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்களின் பதிவுகளை முறையாக பராமரிக்கவும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் எதுவும் தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button