க்ரைம்
Trending

வாலிபரை கை, கால்கள் கட்டி வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

குமரேசன்(41)

திண்டுக்கல், சீலபாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு

குழந்தைபட்டி வடக்கு தெருவை சேர்ந்த குமரேசன்(41) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பெரியக்கோட்டையை சேர்ந்த முத்தன்(எ) மருதமுத்து கடந்த பிப்-ல் வன்னியபட்டி அருகே கொலை செய்யப்பட்டார். அதற்கு கரண்ராஜ் உடந்தையாக இருந்தார். அந்த ஆத்திரத்தில் பழிக்குப்பழியாக கரண்ராஜை கொலை செய்து குளத்தில் வீசியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button