
கரூரிலிருந்து _ திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல் எம் வி எம் கல்லூரி மேம்பாலத்தின் மீது ஏறிய பொழுது கியர் ராடு பழுதாகி நடுவழியில் நிலை தடுமாறியது. சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை பிரேக்கை அழுத்தி நடுவழியில் நிறுத்தினார்.
அவ்வழியே வந்த சிங்கப்பெண் அதிரடி படையினர் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மேம்பாலத்திலிருந்து அரசு பேருந்து கீழே இறக்கி ஓரமாக நிறுத்தச் செய்து போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பழுதான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்த சிங்கப்பெண் அதிரடிப்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
