க்ரைம்

குப்பை லாரியில் ஆற்று மணல் – போலீசார் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்நிலையில், சந்தேகமடைந்த போலீசார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த டிப்பர் லாரியை ராஜ்குமார் என்பவர் ஏலத்தில் வாங்கியதும், லாரியின் பெயரை மாற்றாமல் ஆற்று மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button