
திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், தனது கணவருடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆம்னி பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது கயத்தாறு அருகே சாலையோர ஓட்டலில் ஆம்னி பேருந்து நிறுத்தப்பட்டபோது, பேராசிரியை வைத்திருந்த பையில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. மேலும், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகசூத் கான் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மகசூத் கானை கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.