
எவ்வித முன் அனுமதியும் இன்றி, ஜே.சி.பி (JCB) இயந்திரங்கள் மற்றும் ஆபத்தான வெடிமருந்துகளைப் பயன்படுத்திப் பாறைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன
பாறைகளில் திரவம் (Liquid) மற்றும் வெடிமருந்துகளை ஊற்றி வெடிவைத்து விரிசல்களை ஏற்படுத்துகின்றனர். பின்னர், ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு அப்பாறைகளை இழுத்து உடைக்கின்றனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பாறைகளை உடைப்பதற்கோ அல்லது கனிமச் சுரங்கப் பணிகளுக்கோ (Mining) எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பாறை உடைக்கப்படும் இடத்திற்குக் கீழே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. பாறைகளை வெடிவைத்துத் தகர்க்கும்போது, கல் துண்டுகள் சிதறி கீழே உள்ள வீடுகளின் மீது வந்து விழுகின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்களும் இதனால் சேதமடைந்துள்ளன.
தங்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இது தொடர்பாகத் தொடர் புகார்களை அளித்து வருகின்றனர்.
ஊரில் முக்கியமான பொறுப்பிலும், கோயில் தலைவராகவும் உள்ள ஒருவரே இத்தகைய சட்டவிரோதப் பாறை உடைப்பிலும் ஜே.சி.பி இயந்திரங்களைப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பாதிப்புகள் குறித்துக் கேள்வி எழுப்பும்போது, நிலத்தின் உரிமையாளர் “நான் மாவட்ட ஆட்சியரிடம் (Collector) பேசிக்க கொள்கிறேன்” எனக் கூறி அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சட்டவிரோதச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, மலைமக்களின் பாதுகாப்பையும் இயற்கை வளங்களையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது
