
தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இரு தொகுதி எம்எல்ஏ.,க்களும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களின் பெயர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தவெக அரசுக்கு வெளியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

