அரசியல்

சட்டசபையில் வெளிநடப்பு – முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த உதயநிதி

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் பதிலளித்தபோது, திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாகவும், கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு பணம் சென்றதாகவும் அமலாக்கத்துறை கூறியிருப்பதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் பதிலுரைக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?” என கேள்வி எழுப்பினார். மேலும், முதலமைச்சர் ,மொத்தத்தில் எந்தத் தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்‌ஷன் மோட் என கிரிஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் டம்மி CM எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயாராகுங்கள். இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள் என உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button