
சென்னை மணலி அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரும் அவரது நண்பர்களும் தாயம் விளையாடி கொண்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மணலி அருகே உள்ள மதுபானக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் அங்கிருந்து வந்த 3 பேர் ராம்ராஜை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் இருவரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை அடுத்து, ராம்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாயம் விளையாடியதில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.