
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் மர்ம நபர்களால் கண்ணன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, கொலையாளிகளை விரைவாக கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, அதனடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
