
திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் அருகே கடந்த 25-ஆம் தேதி எலக்ட்ரிக்கல் கடை மற்றும் இரும்பு கடை ஆகியவற்றின் மேற்கூரை, பக்கவாட்டு சுவற்றை உடைத்து கொள்ளையடித்து சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட, திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்த அஸ்கர்பாட்சா(35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்