
கோவை ரயில் நிலையம் பின்புறம் குட்செட் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் தெரியவில்லை.
மேலும், அவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
