
சென்னை தண்டையார்பேட்டை வள்ளலார் சாலையில் உள்ள அலுவலகத்தில் மாதாந்திர மண்டலக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், சில அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் செல்போனில் உரையாடியதாகவும், சிலர் கேம்களை விளையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நடைபெறும் மண்டலக் கூட்டத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து, மாநகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



