அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பதிலளிக்க மறுத்த சரத்குமார்

நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரிடம் செய்தியாளர்கள் இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சரத்குமார், பதில் சொல்வதற்கு எந்த விஷயமும் தெரியாது. இடைத்தேர்தல் நடக்கும், இடைத்தேர்தல் வரும், மறுபடியும் ராஜினாமா செய்வார்கள், அதெல்லாம் எதற்கு இடைத்தேர்தல், இடைத்தேர்தல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இரண்டு இடங்களில் நடக்கிறது என்பது மட்டும் தெரியும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் சரத்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button